close
Choose your channels

ஓடிடியில் 'ஜவான்' வேற மாதிரி இருக்கும்: அட்லி கூறிய ஆச்சரிய தகவல்..!

Sunday, September 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ‘ஜவான்’ திரைப்படம் கடந்த 7ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் கடந்த 10 நாட்களில் கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்டது என்பதும் தெரிந்ததே.

மேலும் இந்த படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஓடிடியில் இந்த படம் வேறு மாதிரி இருக்கும் என்று இயக்குனர் அட்லி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

‘ஜவான்’ திரைப்படத்தின் நீளம் காரணமாகவும், வேறு சில காரணங்களாலும் சில பகுதிகளை நாங்கள் வெட்டி விட்டோம், ஆனால் ஓடிடியில் நாங்கள் படமாக்கிய அனைத்து காட்சிகளையும் இணைத்து வெளியிட முடிவு செய்துள்ளோம் என்றும் அது ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

எனவே திரையரங்குகளில் ‘ஜவான்’ படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தை ஓடிடியில் பார்த்தால் அவர்களுக்கே ஆச்சரியமாக இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. திரையரங்கில் இல்லாத என்னென்ன காட்சிகள் ஓடிடியில் இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி, யோகிபாபு, அம்ரிதா ஐயர் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.