முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு. அடைப்பை நீக்க அவசர சர்ஜரி

  • IndiaGlitz, [Monday,December 05 2016]

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை கடந்த சில நாட்களாக நல்ல நிலையில் தேறி வந்ததாக தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் நேற்று மாலை திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவருடைய உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் முதல்வரின் மாரடைப்பை சரிசெய்ய சற்று முன்னர் சிறு அளவில் சர்ஜரி ஒன்று செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சர்ஜரி முடிந்துவிட்டதாகவும், சர்ஜரியால் அவரது உடல்நிலையில் ஏற்படும் மாற்றத்தை பொருத்து அடுத்தகட்ட மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் அவர்களின் ஆலோசனையின்படியே சிகிச்சைகள் நடைபெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

More News

வெப்-கேமிரா மூலம் திருமணம். விடுமுறை கிடைக்காததால் நடந்த விநோதம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவதுண்டு. ஆனால் தற்போதைய திருமணங்கள் எப்படி எப்படியோ நிச்சயமாகிறது...

சிவகார்த்திகேயன்-நயன்தாராவின் தமிழ்ப்புத்தாண்டு விருந்து

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தமிழ், மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது...

மாவீரன் கிட்டு, கஹானி-2 படங்களின் சென்னை வசூல் நிலவரம்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடித்த 'மாவீரன் கிட்டு' மற்றும் வித்யாபாலன் நடித்த 'கஹானி 2'...

தனுஷின் 'பவர்பாண்டி' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் முதன்முதலில் இயக்கி வரும் 'பவர்பாண்டி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன்...

முதல்வர் உடல்நலம்: டிஜிபி ராஜேந்திரன் அவர்களின் அவசர உத்தரவு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நேற்று மாலை முதல் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது...