ஜெயலலிதா சிலை திறக்க பரோலில் வருகிறாரா சசிகலா?

  • IndiaGlitz, [Thursday,February 23 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் நாளை அதிமுகவினர்களால் கொண்டாடப்பட உள்ளது. ஜெயலலிதா மறைந்த பின்னர் வரும் முதல் பிறந்த நாள் என்பதால் இந்த வருட பிறந்த நாளை அதிமுக அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாட அதிமுகவினர் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் ஒன்பது அடி சிலை ஒன்று உருவக்கப்பட்டு அந்த சிலை இரண்டு தினங்களுக்கு முன் அதிமுக அலுவகத்திற்கு வந்துள்ளதாம்.

இந்த சிலையை அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் வைக்க அதிமுகவினர் முதலில் திட்டமிட்டனர். ஆனால் சசிகலா தற்போது சிறையில் இருப்பதால் அவருடன் ஆலோசனை செய்து வேறு ஒரு நாளில் சிலை திறப்பு விழா நடத்தப்படும், என்றும் இந்த சிலையை சசிகலா பரோலில் வந்து திறந்து வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், நாளை ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த அதிமுக நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து வருகிறாராம்.

More News

விஜய் ஆண்டனியின் 'எமன்'. திரை முன்னோட்டம்

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ஹீரோவாக மாறி 'நான்', 'சலீம்', 'இந்தியா பாகிஸ்தான்', 'பிச்சைக்காரன்' மற்றும் 'சைத்தான்' ஆகிய தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார்

ராகவா லாரன்ஸின் 'சிவலிங்கா' ரிலீஸ் தேதி

ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்டசிவா கெட்டசிவா' மற்றும் 'சிவலிங்கா' ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என்று ஒருசில நாட்களுக்கு முன்னர் செய்திகள் உலா வந்தது. ஆனால் தற்போது 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படம் மட்டும் வரும் வெள்ளியன்று அதாவது பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 'சிவலிங்கா' படத்தின் 

அஜித்துக்கு வாழ்த்து கூறிய பாகுபலி நடிகர்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் விரைவில் பல்கேரியா செல்லவுள்ளனர்...

ஆளுனரின் விரிவான அறிக்கை. ஜனாதிபதி கையில் தமிழக அரசின் எதிர்காலம்

கடந்த 18ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வரலாறு காணாத அமளி ஏற்பட்டது. திமுக உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு நடந்த வாக்கெடுப்பில் முதல்வர் பழனிச்சாமியின் அரசு வெற்றி பெற்றபோதிலும் அரியணைக்கு மேல் இன்னும் கத்தி தொங்கி கொண்டே உள்ளது...

அரவிந்தசாமியின் படத்தில் அஜித்-விஜய்யின் ராசியான நடிகை

தற்போதைய கோலிவுட்டின் ஹாட் நடிகர் அரவிந்தசாமிதான். 'தனி ஒருவன்', 'போகன்' வெற்றிக்கு பின்னர் அவரது கைவசம் படங்கள் குவிந்து வருகிறது...