close
Choose your channels

ஜெயம் ரவி - நயன்தாராவின் 'இறைவன்': ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Tuesday, October 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்த ‘இறைவன்’ என்ற திரைப்படம் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை

இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றி பெறாத ‘இறைவன்’ திரைப்படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் அக்டோபர் 26ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக புதிய போஸ்டர் உடன் கூடிய அறிவிப்பை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்கள் மனதை கவறாத இந்த படம் ஓடிடியில் வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை அகமது இயக்கியுள்ளார். ஹரி வேதாந்த் ஒளிப்பதிவில் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment