ஜெயம் ரவியின் 'அகிலன்' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

  • IndiaGlitz, [Tuesday,May 31 2022]

தமிழ் திரையுலகின் இளைய தலைமுறை நடிகரான ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது.

நடிகர் ஜெயம் ரவி தற்போது ’அகிலன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும் இதன் பின்னர் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சூர்யாவின் ’அஞ்சான்’ படத்தில் நடித்த நடிகர் சிராஜ் ஜானி வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெற்றதாகவும் இந்த படம் ஜெயம் ரவியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

விஜய்யின் 'தளபதி 66' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? எப்போது?

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில்ராஜூ தயாரிப்பில் உருவாகிவரும் 'தளபதி 66' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

'விக்ரம்': கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

 உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் வரும் 3ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

மீமாவது, கீமாவது, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு: செஃப் வெங்கடேஷ் பட்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட், 'நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என்றும் மீமாவது, கீமாவது என்றும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

ஆபாச பட விவகாரம்: பிரபல நடிகை மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஆபாச பட விவகாரத்தில் பிரபல நடிகை மற்றும் அவரது கணவர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் ஹரியின் அடுத்த பட ஹீரோ இந்த பிரபல நடிகரா?

இயக்குனர் ஹரி இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில், உருவான 'யானை' திரைப்படம் வரும் ஜூன் 17-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையதளங்களில்