close
Choose your channels

'விக்ரம்': கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Tuesday, May 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் வரும் 3ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் மற்றும் இந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர்களின் சம்பளம் குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர்களின் சம்பளங்கள் பின்வருமாறு:

கமல்ஹாசன் - 50 கோடி

விஜய் சேதுபதி - 10 கோடி

பஹத் பாசில் - 4 கோடி

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - 8 கோடி

இசையமைப்பாளர் அனிரூத் - 4 கோடி

தொழில்நுட்ப கலைஞர்கள் மற்ற நட்சத்திரங்கள் - 4 கோடி

பட தயாரிப்பு செலவு - 40 கோடி

மேற்கண்ட தகவலின்படி இந்த படத்தின் பட்ஜெட் மொத்தம் ரூ.120 கோடி என தெரிய வந்துள்ளது. இதுபோக புரமோஷனுக்கு ஒருசில கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் வியாபாரத்தை பொருத்தவரை தமிழ் மற்றும் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் பதிப்புகளின் மொத்த வியாபாரம் சுமார் 205 கோடி என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையையும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய லாபம் கிடைத்து உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.