close
Choose your channels

ஜெயம் ரவியின் 30வது படம்.. செம்ம டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

Monday, September 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்த 30வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகிய இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்திற்கு ’பிரதர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் செம மாஸ் லுக் உடன் ஜெயம் ரவி இருக்கும் போஸ்டர் வெளியாகி நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் பூமிகா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இந்த படத்தை ராஜேஷ் எம் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை விற்பனை ஆகிவிட்ட நிலையில் தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் திரையரங்கு உரிமைகள் வியாபாரம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.