ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்

  • IndiaGlitz, [Friday,October 11 2019]

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தலை பயனாளிகளின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று சூப்பர்ஹிட் வெற்றி பெற்றது

இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் 25வது படத்தை இயக்குனர் லட்சுமண் இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த 'ரோமியோ ஜூலியட்' மற்றும் 'போகன்' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கவிருப்பதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த படத்திற்கு ‘பூமி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் பற்றிய திரைக்கதை என்பது குறிப்பிடத்தக்கது. டட்லி ஒளிப்பதிவில் ஜான் படத்தொகுப்பில் தாமரை மற்றும் மதன்கார்க்கி பாடல் வரிகளில் ஸ்டண்ட் சில்வா ஆக்சனில் இந்த படம் உருவாகி வருகிறது

ஜெயம் ரவியின் 26வது படமான ‘ஜனகனமன’ என்ற படத்தை இயக்குனர் அஹ்மது இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

கமல்ஹாசனை குடும்பத்துடன் சந்தித்த பிக்பாஸ் போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீசனின் வெற்றியாளர் முகினுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இன்று அவர் மலேசிய மண்ணில் இறங்கியதும்

தமிழ் பட நடிகையை திருமணம் செய்யும் பிரபல கிரிக்கெட் வீரர்

கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளை திருமணம் செய்வது புதிதல்ல. ஏற்கனவே முகமது அசாருதீன், விராட் கோலி உள்பட பல கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளை திருமணம் செய்துள்ளனர் 

55 வருடங்களுக்கு முன் வெளிவந்த தமிழ் பட டைட்டிலில் எஸ்ஜே சூர்யா படம் 

நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா தற்போது அமிதாப்பச்சன் நடித்து வரும் 'உயர்ந்த மனிதன்' என்ற படத்திலும் ராதாமோகன் இயக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே 

தீபாவளி ரேஸில் இருந்து விலகியது 'சங்கத்தமிழன்'!

தீபாவளி தினத்தில் விஜய் நடித்த 'பிகில், கார்த்தி நடித்த 'கைதி மற்றும் விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்' ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது

பக்கா சிறப்பான தரமான சம்பவம்: 'தலைவர் 168' படத்திற்கு பிரபல நடிகர் வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை சன்பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டது என்பதை பார்த்தோம். சிறுத்தை சிவா இயக்கவிருக்கும்