close
Choose your channels

55 வருடங்களுக்கு முன் வெளிவந்த தமிழ் பட டைட்டிலில் எஸ்ஜே சூர்யா படம் 

Friday, October 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா தற்போது அமிதாப்பச்சன் நடித்து வரும் ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்திலும் ராதாமோகன் இயக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இதனையடுத்து தற்போது இந்த படத்திற்கு ’பொம்மை’ என்ற டைட்டில் வைக்க படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பொம்மை என்ற டைட்டிலில் கடந்த 1964ஆம் ஆண்டு வீணை எஸ் பாலச்சந்தர் இயக்கிய ஒரு திரைப்படம் வெளிவந்தது என்பதும், இந்த படத்தில்தான் பிரபல பின்னணி பாடகர் கே ஜே ஜேசுதாஸ் பாடகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

55 வருடங்களுக்குப்பின் மீண்டும் ‘பொம்மை’ டைட்டிலில் உருவாகி வரும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏஞ்சல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.