ஜெயம் ரவியின் 'சைரன்' படத்தின் சூப்பர் அப்டேட்.. படப்பிடிப்பு முடிவடைவது எப்போது?

  • IndiaGlitz, [Wednesday,April 12 2023]

நடிகர் ஜெயம் ரவி நடித்த ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த மாதம் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது ’இறைவன்’ ’சைரன்’ மற்றும் ’ஜெயம் ரவி 30’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சற்று முன் ’சைரன்’ படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவியின் ‘சைரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்காலில் நடைபெற்று வருவதாகவும் அங்கு ஜெயம் ரவி, அனுபமா பரமேஸ்வரன் திருமண காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த திருமண காட்சியில் ஒரு பாடல் இடம் பெறுவதை அடுத்து இந்த பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக இந்த திருமண காட்சி மற்றும் பாடல் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் இந்த படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது என்றும் இதனை அடுத்து ஜெயம் ரவி ’பொன்னின் செல்வன் 2’ படத்தின் புரோமோஷன் பணிகளில் களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி இந்த படத்தில் கைதியாகவும், கீர்த்தி சுரேஷ் காவல்துறை அதிகாரியாகவும், ஜெயம் ரவி ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வரும் இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

ரஜினி, சூர்யாவை அடுத்து தயாரிப்பாளர் விஏ துரைக்கு நிதியுதவி செய்த பிரபல நடிகர்..!

பிரபல தயாரிப்பாளர் விஏ துரை உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு பிரபல நடிகர் ஒருவர் நிதி உதவி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

என் இதயம் எப்போதும் பிரபுவுக்காக துடிக்கும்.. 32வது வருடத்தில் குஷ்புவின் நெகிழ்ச்சி பதிவு..!

 பிரபு, குஷ்பு நடித்த 'சின்னத்தம்பி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 32 வருடங்கள் ஆனதை அடுத்து இந்த படம் குறித்து நெகிழ்ச்சியான தனது கருத்தை நடிகை குஷ்பு தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 

'கேஜிஎப்' வில்லன் கருடா மனைவி குழந்தைகளை பார்த்ததுண்டா? க்யூட் குடும்ப புகைப்படங்கள்..!

 நடிகர் யாஷ் நடித்த 'கேஜிஎப்'  திரைப்படத்தில் கொடூர வில்லனாக நடித்த கருடாவின் மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மாதவன் - நயன்தாரா படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகை..!

மாதவன் மற்றும் சித்தார்த் ஆகிய இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் 'தி டெஸ்ட்' என்ற திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

DRS என்றால் தோனி ரெவ்யூ சிஸ்டமா? மின்னல் வேகத்தில் முடிவெடுக்கும் தல..!

 கிரிக்கெட் விளையாட்டில் DRS என்பது உண்டு என்பதும் அதற்கு Decision Review System என்பது பொருள் என்பதும் கிரிக்கெட் தெரிந்த அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தோனி இந்த DRS முடிவை எடுப்பதில் மின்னல்