மிருதன்' பட டிராக்லிஸ்ட் வெளியீடு

  • IndiaGlitz, [Friday,January 08 2016]

2015ஆம் ஆண்டின் கோலிவுட் வெற்றி நாயகன் ஜெயம் ரவி நடித்த 'மிருதன்' படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது. தமிழின் முதல் ஜோம்பி படம் என்ற விளம்பரமே இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை அதாவது ஜனவரி 9ஆம் தேதி வெளிவரும் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தற்போது இந்த படத்தின் டிராக்லிஸ்ட் வெளியாகியுள்ளது. டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. நான்கு பாடல்களையும் கார்க்கி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு தீம் மியூசிக்களும் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த படத்தின் டிராக்லிஸ்ட் பின்வருமாறு:

1. முன்னாள் காதலி என்று தொடங்கும் பாடலை விஷால் தத்லானி, சரண்யா கோபிநாத் ஆகியோர் பாடியுள்ளனர்.

2. மிருதா மிருதா என்று தொடங்கும் பாடலை ஷ்ரேயா கோஷல் மற்றும் விஜய்ஜேசுதாஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.

3. முன்னாள் காதலி என்று தொடங்கும் இன்னொரு வெர்ஷன் பாடலை ஹரிசரண் பாடியுள்ளார்..

4, வெறி வெறி வெறி என்று தொடங்கும் பாடலை சுரா ஜெகன், மரியா கவிதா தாமஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.

More News

பிறந்த நாளில் வெள்ள நிவாரண நிதியளித்த சரோஜாதேவி

கன்னடத்து பைங்கிளி என்று அழைக்கப்படும் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்....

வியாபாரத்தில் ஒன்றிணைந்தது ரஜினி-விஜய் படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கி வரும் 'கபாலி' திரைப்படம் மற்றும் இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தெறி' திரைப்படம் ஆகிய இரண்டு படங்களையும் பிரபல முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே...

சிம்புவுடன் இணைகிறார் அடல்ட் காமெடி இயக்குனர்

சமீபத்தில் வெளியான ஜி.வி.பிரகாஷ், 'கயல்' ஆனந்தி மற்றும் மனிஷா நடித்த 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' என்ற அடல்ட் காமெடி திரைப்படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் ஒரு இளைஞர்களுக்கான படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்....

தனுஷின் 'அம்மா கணக்கு' இன்று முதல் ஆரம்பம்

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்த 'வேலையில்லா பட்டதாரி' என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்த அமலாபால், தற்போது மீண்டும் அதே நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்..

லைகா - ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரூ.350 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் '2.0' என்ற படத்தை தயாரித்து வருகிறது...