close
Choose your channels

மிருதன்' பட டிராக்லிஸ்ட் வெளியீடு

Friday, January 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2015ஆம் ஆண்டின் கோலிவுட் வெற்றி நாயகன் ஜெயம் ரவி நடித்த 'மிருதன்' படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது. தமிழின் முதல் ஜோம்பி படம் என்ற விளம்பரமே இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை அதாவது ஜனவரி 9ஆம் தேதி வெளிவரும் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தற்போது இந்த படத்தின் டிராக்லிஸ்ட் வெளியாகியுள்ளது. டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. நான்கு பாடல்களையும் கார்க்கி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு தீம் மியூசிக்களும் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த படத்தின் டிராக்லிஸ்ட் பின்வருமாறு:

1. முன்னாள் காதலி என்று தொடங்கும் பாடலை விஷால் தத்லானி, சரண்யா கோபிநாத் ஆகியோர் பாடியுள்ளனர்.

2. மிருதா மிருதா என்று தொடங்கும் பாடலை ஷ்ரேயா கோஷல் மற்றும் விஜய்ஜேசுதாஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.

3. முன்னாள் காதலி என்று தொடங்கும் இன்னொரு வெர்ஷன் பாடலை ஹரிசரண் பாடியுள்ளார்..

4, வெறி வெறி வெறி என்று தொடங்கும் பாடலை சுரா ஜெகன், மரியா கவிதா தாமஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.