close
Choose your channels

சூப்பர் ஹிட் படத்தின் டைட்டில்.. ஜெயம் ரவி - உதயநிதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

Wednesday, November 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

இந்த படத்திற்கு ’காதலிக்க நேரமில்லை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1964 ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் ரவிச்சந்திரன், நாகேஷ், காஞ்சனா, டிஎஸ் பாலையா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் தலைப்பில் மீண்டும் ஒரு திரைப்படம் உருவாக உள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

ஜெயம் ரவி ஜோடியாக நித்யா மேனன் நடிக்கும் இந்த திரைப்படத்தில் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். யோகி பாபு, வினய், லால், ஜான் கொக்கன், பானு, லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி, பாடகர் மனோ உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment