close
Choose your channels

அனல் பறக்கும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் ஜெயம் ரவி.. இதுதான் காரணம்..!

Saturday, November 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் வீடு ஒரு பக்கம் பிரதீப் வெளியேற்றத்தினாலும், இன்னொரு பக்கம் மாயா பூர்ணிமா குரூப்பின் அட்டகாசத்தாலும் பரபரப்பாக உள்ளது. இந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்கு ஜெயம் ரவி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடித்த ’சைரன்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த டீசர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்கு ஜெயம் ரவி உட்பட படக்குழுவினர் செல்ல உள்ளனர். கமல்ஹாசன் முன்னிலையில் ஜெயம் ரவியின் சைரன் திரைப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ’தக்லைப்’ என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜெயம் ரவியின் ’சைரன்’ படத்தின் டீசர் கமல்ஹாசன் முன்னிலையில் வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.