close
Choose your channels

ஜெயம் ரவியின் 'JR30' திரைப்படத்தின் டைட்டில் என்ன? சூப்பர் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்..!

Sunday, September 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஜெயம் ரவி நடித்த 30வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் சற்றுமுன் அறிவித்துள்ளது.

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ராஜேஷ் இயக்கியிருக்கும் திரைப்படம் ’JR30’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து, இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை அதாவது விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகும் என்று இந்த படத்தை தயாரித்த ஸ்கிரீன் சீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் ஜெயம் ரவி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் உள்ளனர்,.

ஏற்கனவே இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை விற்பனை ஆகிவிட்ட நிலையில் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்க்கு பின்னர் தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் திரையரங்கு உரிமைகள் வியாபாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.