close
Choose your channels

'ஜகமே தந்திரம்' நடிகரின் காரை அடித்து நொறுக்கிய காங்கிரஸார்: பெரும் பரபரப்பு!

Tuesday, November 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவரின் காரை காங்கிரஸ் கட்சியினர் நடுரோட்டில் அடித்து நொறுக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் அந்த வழியாக நடிகர் ஜோஜு ஜார்ஜ் தனது காரில் வந்தபோது அவரது கார் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் காரில் இருந்து கொண்டு போராட்டத்தை கைவிடுங்கள் என்றும், அவசரமாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் அவரது காரை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து நடிகர் ஜோஜூ ஜார்ஜ் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது ’என்னுடைய காரில் நோயாளி இருந்ததால் அவசரமாக செல்ல வேண்டும் என்றும் அதனால் போராட்டத்தை கைவிடுங்கள் என்றும் அமைதியான முறையில் கூறினேன். ஆனால் காங்கிரஸார் என்னுடைய காரை அடித்ததால் கார் கண்ணாடி சேதமடைந்தது. இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தில் சிவதாஸ் என்ற முக்கிய கேரக்டரில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடித்து இருந்தார் என்பதும் இவர் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment