விஷாலின் 'இரும்புத்திரை' வில்லனாக சர்வதேச பிரபலம்

  • IndiaGlitz, [Saturday,May 13 2017]

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது விஷால் 'இரும்புத்திரை' படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். முதன்முதலாக விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ள இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படத்தை விஷாலின் 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் வில்லனாக சரவதேச மார்ஷியல் நிபுணர் ஜெர்மி ரோஸ்கி நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே திலீப் சுப்பராயனின் 'சங்கு சக்கரம்' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபன் படத்தொகுப்பில், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரஜினிக்கு வந்த மிரட்டல் குறித்து தமிழிசை செளந்தரராஜன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள 'ரஜினி 161' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ளது.

ரசிகர்களுடன் சந்திப்பு: ரஜினி மன்ற தலைவர் முக்கிய அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் 15ஆம் தேதி சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்கவுள்ளார்.

நாம் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது. 'பாகுபலி 2' குறித்து கமல்ஹாசன்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் குறித்து பேசாத ஆளே இல்லை எனலாம்

மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் தோனியின் காதலி

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்து வரும் 'ஸ்பைடர்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்கவுள்ளது.

உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை! ரஜினிக்கு மும்பை தாதா மகன் மிரட்டல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கவுள்ள 'ரஜினி 161' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் தொடங்கவுள்ளது.