close
Choose your channels

ஆசிரியராகும் கனவு… 1,200 கி.மீ தூரத்தை மொபட்டில் கடந்துவந்த கர்ப்பிணி பெண்!!! நெகிழ்ச்சி சம்பவம்!!!

Saturday, September 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது மனைவியை, தேர்வு எழுதுவதற்காக 1,200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு மொபட்டிலேயே அழைத்து வந்து இருக்கிறார். அதுவும் 4 மாநில எல்லைகளைக் கடந்து கர்ப்பிணிப் பெண்ணை மொபட்டில் வைத்து அழைத்து வந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பருவமழை வலுவடைந்து இருக்கும் இந்நேரத்தில் இத்தனை ஆபத்தான பயணத்தை தம்பதி இருவரும் எதற்காக தேர்ந்தெடுத்தனர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்செயன் (27) என்ற இளைஞர் ஹெம்ப்ராம் என்ற பழங்குடியினப் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். ஹெம்ப்ராம் ஆசிரியர் பயிற்சிக்கான கல்வியைப் படித்து வருகிறார். இந்நிலையில் அப்பயிற்சி வகுப்புக்கான இறுதித்தேர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேர்வு மையம் மகாராஷ்டரா மாநிலத்தில் உள்ள குவாலியர் எனத் தெரிந்தும் ஹெம்பப்ராம் அதிர்ந்து போயிருக்கிறார். கொரோனா காலத்தில் ரயில், பேருந்து போன்ற வசதிகள் எதுவும் இல்லாமல் இத்தம்பதியினர் தவித்து வந்துள்ளனர். 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுள்ள தனஞ்செயன் தனது மனைவியின் லட்சியத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என முடிவெடுத்து அதற்குரிய வழியைத் தேடியிருக்கிறார்.

முதலில் கார் பயணம் மேற்கொள்ள விசாரித்து இருக்கின்றனர். 30 ஆயிரம் வரை செலவாகும் எனக்கூறப்பட்ட நிலையில் அத்திட்டத்தை கைவிட்டு இருக்கின்றனர். பின்னர் தன்னிடம் இருந்த நகை ஒன்றை அடகு வைத்து ரூ.10 ஆயிரம் திரட்டிய்தோடு தனது சொந்த மொபட்டை எடுத்துக் கொண்டு பயணம் செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள குவாலியருக்கு 1,200 கிலோ மீட்டர் தூரத்தை மொபட்டிலேயே கடந்து வந்துள்ளனர். வழியில் நிறைய இடங்களில் மழை பெய்திருக்கிறது. அதையும் பொருட்படுத்தாமல் இறுதியில் குவாலியரை அடைந்துள்ளனர். தற்போது குவாலியருக்கு வந்த நிலையில் தங்கும் அறை, போக்குவரத்து செலவு எல்லாமும் சேர்த்து இதுவரை 5 ஆயிரம் ரூபாய் செலவானதாகவும் தம்பதிகள் தெரிவித்து உள்ளனர்.

தற்போது தனஞ்செயன்-ஹெம்ப்ராம் தம்பதியினர் பயணம் செய்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. இச்சம்பவத்தை கேள்விப்பட்ட குவாலியர் மாவட்ட நிர்வாகம் தம்பதியினருக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வந்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பாக அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நன்கொடை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. தனது லட்சியத்தை அடைய எதையும் பொருட்படுத்தாமல் 1,200 கி.மீ பயணம் செய்துவந்த கர்ப்பிணிக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.