குஜராத் தலைவர் ஜிக்னேஷ் மேவானியையும் விட்டு வைக்காத பிரியாவாரியர் கண்ணசைவு

  • IndiaGlitz, [Wednesday,February 14 2018]

மலையாள நடிகை பிரியாவாரியாரின் ஒரே ஒரு கண்ணசைவும், புருவ நடனமும் தென்னிந்திய ரசிகர்களை மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள இளைஞர்களை சுண்டி இழுத்துள்ளது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் குஜராத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜிக்னேஷ் மேவானியையும் பிரியாவாரியரின் கண்ணசைவு தாக்கம்  விட்டுவைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இன்றைய காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்த ஜிக்னேஷ் மேவானி, “காதலர் தினத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு, வைரல் ஹிட்டான ‘மணிகியா மலராய பூவி’ பாடல்தான் பதில். இந்தியர்கள் ஒருவரை வெறுப்பதை விட ஒருவரை நேசிப்பதைதான் அதிகம் விரும்புகின்றனர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டனர். இந்த அழகான வீடியோவை ரசியுங்கள்,” என்று தெரிவித்து பிரியாவாரியரின் வீடியோவையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

சினிமா ரசிகர்களை மட்டுமின்றி அரசியல் தலைவர்களையும் கவர்ந்துவிட்ட பிரியாவாரியருக்கு இன்னும் எங்கெங்கிருந்து பாராட்டுக்கள் குவியப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

அஜித்தின் 'விசுவாசம்' இசையமைப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு

இந்த சிவராத்திரி எனக்கு ஒரு மேஜிக் அனுபவம்: தமன்னா

நேற்று உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் சிவராத்திரி கொண்டாடப்பட்டது தெரிந்ததே. அந்த வகையில் கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஈஷா யோகா மையத்தில்

வறுமையில் வாடும் பாட்டி நடிகைக்கு நடிகர் சங்கம் செய்த உதவி

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நாசர் தலைமையிலான அணி நிர்வாகத்தை கைப்பற்றியதில் இருந்து பல நலிவுற்ற நடிகர் நடிகைகளுக்கு உதவி செய்து வருவதை பார்த்து வருகிறோம்.

கார்த்திக் சுப்புராஜின் இணை இயக்குனரின் புதிய படம்

பிரபல இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த விஜய்ராஜ் என்பவர் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.

புருவத்தை தூக்கி கண்ணடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது எப்படி? பிரியா வாரியர்

ஒரே ஒரு கண்ணசைவில் உலகப்புகழ் பெறுவது கற்பனையில் கூட முடியாத காரியம் என்ற நிலையில் இதனை உண்மையாக்கி காட்டியுள்ளார் பிரியா பிரகாஷ்.