close
Choose your channels

அஜித்தின் 'விசுவாசம்' இசையமைப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு

Wednesday, February 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இசையமைக்க முதலில் அனிருத், யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் பரிசீலனை செய்யப்பட்டனர். பின்னர் டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் டி.இமான் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்று சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் படத்தில் முதல்முறையாக மெலடி கிங் டி.இமான் இசையமைப்பது இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.