close
Choose your channels

ஜீவாவின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நாயகி.. இயக்குனர் யார் தெரியுமா?

Thursday, December 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஜீவா நடித்த ’காபி வித் காதல்’ மற்றும் ’வரலாறு முக்கியம்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆன நிலையில் தற்போது அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தில் ஜீவா நடிக்க உள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குனர் மணிகண்டன் என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படம் ஒரு கமர்ஷியல் கதையம்சம் கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீவா ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’கருப்பன்’ உதயநிதி ஸ்டாலின் நடித்த ’நெஞ்சுக்கு நீதி’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில் இந்த பூஜையில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கின்றார். சித்தார்த் எடிட்டராகவும் மெட்ரோ மகேஷ் ஸ்டண்ட் இயக்குனராகவும் இந்த படத்தில் பணிபுரிய உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற உள்ளது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment