எல்லோரும் 9 மணிக்கு விளக்கேற்றுங்கள்: பிரபல தமிழ் நடிகர்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏப்ரல் ஐந்தாம் தேதி அதாவது இன்று இரவு 9 மணிக்கு அனைவரும் வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி, டார்ச்லைட் போன்றவற்றை ஏற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்று பலர் இன்று விளக்கேற்ற தயாராகி வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு பல திரைப்பட பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மோகன்லால், நாகார்ஜூன் உட்பட பல நடிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்த வீடியோக்களை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜீவாவும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார். அவர் இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:

இந்த உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை துரத்தி அடிக்கவும், எல்லோருக்கும் நம்பிக்கை கொடுப்பதற்காகவும், எல்லோரும் தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று நமது மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் நம்மை அழைத்துள்ளார். ஜனதா கர்ஃபியூ அன்று டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனைவரும் ஒற்றுமையுடன் கைதட்டியவாறு, ஏப்ரல் ஐந்தாம் தேதி அதாவது இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் எல்லோரும் அவரவர் வீட்டில் தீபம் ஏற்றியோ அல்லது மெழுவர்த்தி ஏற்றியோ அல்லது செல்போன்களை ஒளிர செய்தோ, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நம் ஒற்றுமையை காட்டுவோம்’ என்று நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

More News

கொரோனா விடுமுறையில் வீட்டில் அல்வா கிண்டிய பிரபல நடிகை

கொரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பிசியாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் நடிகைகள் அனைவரும் தற்போது நாட்கணக்கில் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர் 

கணவருக்கு கொரோனா கசாயம் கொடுத்து சொந்த வீட்டிலேயே திருடிய மனைவி கைது!

கணவருக்கு தூக்க மருந்து கலந்த கொரோனா கசாயம் கொடுத்து சொந்த வீட்டிலேயே 100 பவுன் நகை திருடிய மனைவியால் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன் தினம் ஒன்று மட்டுமே இருந்த நிலையில் நேற்று இருவர் பலியானதால் அந்த எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது

கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல பாடகி!

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து இந்தியா திரும்பி வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை

தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு 4வது பலி

கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால் கொரோனா வைரஸ் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.