விஜய்சேதுபதியின் அடுத்த படம் ஓடிடியில் நேரடி ரிலீஸ்.. தேதியை அறிவித்த ஜியோ சினிமா..!

  • IndiaGlitz, [Friday,May 26 2023]

கடந்த சில மாதங்களாக நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதும் ஒரு கட்டத்தில் நேரடியாக எந்த திரைப்படமும் ரிலீஸ் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்பாகி வரும் ஜியோ சினிமா தமிழ் உள்பட ஒருசில மொழி திரைப்படங்களை ஓடிடியில் நேரடியாக வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

ஏற்கனவே விஷ்ணு விஷாலின் ’மோகன்தாஸ்’ உள்பட ஒரு சில திரைப்படங்களை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஜியோ சினிமா அறிவித்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்த ஹிந்தி திரைப்படமான ’மும்பைகார்’ என்ற படத்தை நேரடியாக ஜியோ சினிமா ஓடிடியில் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 2ஆம் தேதி இந்த படம் நேரடியாக ரிலீஸ் செய்யப்படும் என்று கூறியதோடு இந்த படத்தின் டீசரையும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி, விக்ராந்த் மாஸ்ஸே உள்பட பலர் நடிப்பில் உருவாகும் இந்த படத்தை சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ’மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

234 தொகுதிகளிலும் மதிய உணவு.. பசிப்பிணியை போக்கிடும் தளபதி விஜய்..!

ஒவ்வொரு ஆண்டும் மே 28ஆம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படும் நிலையில் அன்றைய தினத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள மக்களுக்கு மதிய உணவு அளிக்க ரசிகர்களுக்கு

60 வயதில் திருமணம் செய்து கொண்ட ரஜினி, விஜய் பட நடிகர்.. வைரல் புகைப்படங்கள்..!

ரஜினி, விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் மற்றும் குணசுத்திர வேடங்களில் நடித்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி 60 வயதில் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

நடிகை அஞ்சலியின் 50வது படத்தின் அறிவிப்பு.. ரசிகர்கள் வாழ்த்து..!

தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவரான அஞ்சலியின் 50வது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 

சென்னையை டைட்டிலாக கொண்ட ஹாலிவுட் படம்.. சமந்தா தான் நாயகி..!

சென்னையை டைட்டிலாக கொண்ட ஹாலிவுட் திரைப்படத்தில் நடிகை சமந்தா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 

நீச்சல் குளத்தில் 40 வயது பிக்பாஸ் நடிகை.. வேற லெவல் கிளாமர் பிகினி புகைப்படங்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 40 வயது நடிகை பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில்