close
Choose your channels

நடிகை அஞ்சலியின் 50வது படத்தின் அறிவிப்பு.. ரசிகர்கள் வாழ்த்து..!

Thursday, May 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவரான அஞ்சலியின் 50வது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவான ’கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. அந்த படத்தில் அவர் ஆனந்தி என்ற கேரக்டராகவே வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ’அங்காடி தெரு’ திரைப்படத்திலும் அவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது என்பதும் அதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் நாயகியாகவும், முக்கிய கேரக்டரிலும் நடித்தார். அஜித்தின் ’மங்காத்தா’ சூர்யாவின் ’சிங்கம் 2’ உள்பட பல படங்கள் அவரது நடிப்புக்கு தீனியாக அமையும் வகையில் அவருக்கு கேரக்டர்கள் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திரையுலகில் அஞ்சலி நடிகையாக எண்ட்ரி ஆகி 17 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது அவர் தனது 50வது படத்தில் நடிக்க உள்ளார். அஞ்சலியின் 50வது படத்தை க்ரீன் அமியூஸ்மெண்ட் மற்றும் டி3 புரடொக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 27ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திரை உலகில் 50 படங்கள் என்ற மைல்கல்லை எட்டிய அஞ்சலிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.