அமெரிக்காவின் கதையை மாற்றிய இருவர்… டைம் இதழின் புதிய கவுரம்!!!

 

உலகின் பிரபல பத்திரிக்கையான டைம் இதழ் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மனிதர்களை தேர்வு செய்து அவர்களை கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த மனிதர்களாக இருவரை தேர்வு செய்து உள்ளது. அதில் அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபரான கமலா ஹாரிஸ் இருவரும் இடம் பெற்றுள்ளனர். மேலும் இவர்களை கவுரவிக்கும் விதமாக அமெரிக்காவின் கதையை மாற்றியவர்கள் என்ற குறிப்புடன் அவர்களின் அட்டை படத்தையும் டைம் இதழ் வெளியிட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு டைம் இதழுக்கான சிறந்த மனிதர் என்ற வரிசையில் உலகின் மிகச்சிறிய வயது இளம் போராளியான கிரெட்டா துன்பெர்க் இடம் பெற்று இருந்தார். இவர் காலநிலை மாற்றத்தைக் குறித்து உலகப் பொருளாதார மாநாட்டின் எழுப்பிய கேள்விகள் உலகம் முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது எனலாம். அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த மனிதர்கள் என்ற வரிசையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் இடம் பெற்று உள்ளனர்.

தேர்தலில் அதிபர் பதவியை பெறுவதற்குத் தேவையான 270 வாக்குகளைவிட அதிகமாக 290 வாக்குகளை பெற்று புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த ஜோ பிடன். இத்தேர்தலில் குடியரசு கட்சியைச் சார்ந்த டிரம்ப் 214 வாக்குகளை மட்டுமே பெற்று அதிபர் பதவிக்கான போட்டியில் தோல்வியைச் சந்தித்தார். மேலும் இதை சட்டரீதியாக எதிர்கொள்வேன் எனத் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடுத்து வரும் டிரம்ப் வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை மட்டுமே அதிபர் பதவியில் இருக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கோலியா??? டோனியா??? காரசாரமான விவாதத்தின் இறுதி முடிவு என்ன தெரியுமா???

இந்திய கிரிக்கட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் டோனி குறித்து டிவி நிகழ்ச்சி ஒன்றில் காரசாரமான விவாதம் ஏற்பட்டு உள்ளது

தடுப்பூசி போட்டுக்கொண்டால் மது அருந்தக்கூடாதா??? விளக்கம் அளிக்கும் விஞ்ஞானிகள்!!!

ஃபைசர், ஸ்புட்னிக் வி எனும் 2 கொரோனா தடுப்பூசிகள் தற்போது பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

ரியோவுக்கு ஒரு குறும்படம்: வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

பிக்பாஸ் வீட்டில் நடந்த புதிய மனிதா டாஸ்க்கில் குரூப்பிஸம் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது மட்டுமின்றி அந்த குரூப்பில் உள்ள ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு பொய்யர்கள் என்பதும் தெரிய வருகிறது.

கேப்டன் பதவியை ரம்யாவுக்கு விட்டு கொடுக்கின்றாரா பாலாஜி?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஒட்டுமொத்தமாக சிறந்த போட்டியாளராக தேர்வு செய்யப்பட்ட நிஷாவும், இந்த வாரத்தில் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட பாலாஜி

நீங்களுமா? ஆரிக்கு ஒரு குறும்படத்தை பார்சல் செய்த நெட்டிசன்கள்! 

பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் செய்யும் பல தவறுகளை கமல்ஹாசன் கண்டுகொள்வதில்லை என்றும் கடந்த சீசன்கள் போல் இந்த சீசனில் போட்டியாளர்களை அவர் கடுமையாக கண்டிக்கவில்லை