close
Choose your channels

நீங்களுமா? ஆரிக்கு ஒரு குறும்படத்தை பார்சல் செய்த நெட்டிசன்கள்! 

Friday, December 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் செய்யும் பல தவறுகளை கமல்ஹாசன் கண்டுகொள்வதில்லை என்றும் கடந்த சீசன்கள் போல் இந்த சீசனில் போட்டியாளர்களை அவர் கடுமையாக கண்டிக்கவில்லை என்றும் குறும்படங்களும் அதிகம் போடுவதில்லை என்றும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது

ஆனால் அந்த குறையை தீர்க்கும் வகையில் நெட்டிசன்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஹவுஸ்மேட்ஸ் எப்படியெல்லாம் மாற்றி மாற்றி பேசுகிறார்கள் என்பதை தோலுரித்து குறும்படங்களை தினந்தோறும் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுவரை நியாயமாக விளையாடி வருபவர் என்றும் அடிக்கடி கமல்ஹாசனிடம் பாராட்டு பெற்று வருபவருமான ஆரிக்கும் நெட்டிசன்கள் ஒரு குறும்படத்தை தயார் செய்துள்ளனர். நேற்று இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளர் தேர்வின்போது ‘நிஷா மலேசியாவில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்கு லேண்ட் ஆகி வந்துவிட்டார் என்றும் அவருக்கு தான் என் ஓட்டு என்றும் ஆரி குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதே ஆரி தான் வெளியே வந்து ரம்யாவிடம் நாம் நிஷாவை தான் மோசமான போட்டியாளராக தேர்வு செய்திருக்க வேண்டும் என்றும் , அவரால் தான் டாஸ்க்கின் சுவாரஸ்யம் குறைந்தது என்றும் கூறுகிறார்.

சிறந்த போட்டியாளராக நிஷாவுக்கு ஓட்டு போட்ட ஆரி, வெளியே வந்து மோசமான போட்டியாளர் என நிஷாவை கூறுவது எந்த வகையில் நியாயம் என குறும்படத்தை பதிவு செய்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதே கேள்வியை கமல்ஹாசன் நாளை ஆரியிடம் கேட்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.