லேடி காகாவின் லிப்கிஸ்.. ஜோக்கின் பீனிக்ஸ்-க்கு இன்னொரு ஆஸ்கர் விருது? 'ஜோக்கர் 2' டீசர்

  • IndiaGlitz, [Wednesday,April 10 2024]

ஜோக்கின் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ’ஜோக்கர்’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் நாயகன் ஜோக்கின் பீனிக்ஸ்-க்கு ஆஸ்கார் விருது கிடைத்தது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரபல பாடகியான லேடி காகா ‘ஜோக்கர் 2’ படத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் ஜோக்கின் பீனிக்ஸ் மீண்டும் நாயகனாக நடித்துள்ளார். அவர் இந்த டீசரின் ஆரம்பத்தில் சிறையில் இருப்பது போல் இருக்கும் நிலையில், லேடி காகா அவரிடம் நாம் சிறையில் இருந்து தப்பிக்கலாமா என்று கேட்பதுடன் டீசர் தொடங்குகிறது.

மேலும் இருவருக்கும் ரொமான்ஸ், லிப் கிஸ் உட்பட பல அழுத்தமான காட்சிகள் இருப்பதை அடுத்து இந்த படத்திலும் ஜோக்கின் பீனிக்ஸ் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ’ஜோக்கர்’ படத்தின் முதல் பாகம் தமிழில் வெளியாகாத நிலையில் இரண்டாம் பாகம் தமிழில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இந்த டீசர் தமிழில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More News

ஜீ தமிழ் 'அண்ணா' சீரியலில் இருந்து விலகிய நடிகை.. இனி இவருக்கு பதில் இவர் யார்?

ஜீ தமிழ் சேனலில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'அண்ணா' என்ற சீரியலில் இருந்து பிரபல நடிகை விலகி விட்டதை அடுத்து அவர் நடித்த கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிங்கம் சிங்கிளா தான் வரும்: செஃப் வெங்கடேஷ் பட் வீடியோ வைரல்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்த வெங்கடேஷ் பட் அந்த நிகழ்ச்சிகளில் இருந்து விலகி விட்டதாக கூறிய நிலையில் தற்போது தன்னுடைய புதிய பயணம் குறித்த வீடியோவை

சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் சம்பளம் எவ்வளவு தெரியுமா? சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

இந்த நிலையில் தற்போதைய அவருடைய மொத்த சொத்து மதிப்பு 36 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரிடம் விலைமதிப்புள்ள ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ கார் வகைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

'இந்தியன் 2' படத்தில் கேமியோ ரோலில் 'இந்தியன்' நடிகை.. ஷங்கரின் வேற லெவல் பிளான்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2'  படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது

கமல் படத்தில் மாஸ் கேரக்டர்.. ரஜினி படத்தில் காமெடியன்.. பகத் பாசில் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படத்தில் ஒரு மாஸ் கேரக்டரில் நடித்த நடிகர் பகத் பாசில், ரஜினி நடித்து வரும் 'வேட்டையன்' திரைப்படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுவது