close
Choose your channels

லேடி காகாவின் லிப்கிஸ்.. ஜோக்கின் பீனிக்ஸ்-க்கு இன்னொரு ஆஸ்கர் விருது? 'ஜோக்கர் 2' டீசர்

Wednesday, April 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜோக்கின் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ’ஜோக்கர்’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் நாயகன் ஜோக்கின் பீனிக்ஸ்-க்கு ஆஸ்கார் விருது கிடைத்தது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரபல பாடகியான லேடி காகா ‘ஜோக்கர் 2’ படத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் ஜோக்கின் பீனிக்ஸ் மீண்டும் நாயகனாக நடித்துள்ளார். அவர் இந்த டீசரின் ஆரம்பத்தில் சிறையில் இருப்பது போல் இருக்கும் நிலையில், லேடி காகா அவரிடம் நாம் சிறையில் இருந்து தப்பிக்கலாமா என்று கேட்பதுடன் டீசர் தொடங்குகிறது.

மேலும் இருவருக்கும் ரொமான்ஸ், லிப் கிஸ் உட்பட பல அழுத்தமான காட்சிகள் இருப்பதை அடுத்து இந்த படத்திலும் ஜோக்கின் பீனிக்ஸ் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ’ஜோக்கர்’ படத்தின் முதல் பாகம் தமிழில் வெளியாகாத நிலையில் இரண்டாம் பாகம் தமிழில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இந்த டீசர் தமிழில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.