close
Choose your channels

இந்த கடலில மீனைவிட அதிகமாக கத்தியும் ரத்தமும் கொட்டிக்கிடக்கு.. அதனால தான் இது செங்கடல்: 'தேவரா' டீசர்..!

Monday, January 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடலுக்கு அடியில் நடக்கும் கத்தி சண்டையால் கடல் ரத்தத்தால் செங்கடலாக மாறும் காட்சிகள் கொண்ட ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ’தேவரா’ திரைப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல தெலுங்கு திரையுலக இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’தேவரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக உள்ளது . இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும் கப்பலை வழிமறித்து அதில் உள்ள கண்டெய்னர்களை கொள்ளையடிக்கும் கும்பலுக்கும் கப்பலில் உள்ளவர்களுக்கும் இடையே நடக்கும் போர்க்காட்சிகள் தான் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது. கடலுக்குள் நடக்கும் கத்தி சண்டை காரணமாக கடலில் ஒரு பகுதியே சிவப்பு நிறமாக ரத்தத்தால் மாறிவிடும் காட்சி அதிர வைக்கிறது.

ஜூனியர் என்டிஆர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இந்த படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் தெலுங்கு திரையுலகில் நாயகியாக அறிமுகம் ஆகிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் என்பது கூடுதல் சிறப்பாகும். இந்த படம் வரும் ஏப்ரல் வாய்ந்த 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டீசர் ரிலீசால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment