ஜுவான்டஸ் டிபாலாக்கு கொரோனா பாதிப்பா..?!

ஜுவான்டஸ் அணியின் நட்சத்திர வீரர் பவுலோ டிபாலாக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. கொரோனா வைரஸ் தோற்றானது உலகம் முழுவதும் 123 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும் ஐரோப்பா கண்டத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இத்தாலியில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இன்று வரை 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 8ம் தேதி ஜூவான்டஸுக்கும் இன்டெர்மிலனுக்கும் இடையே இத்தாலியின் ஆலியன்ஸ் மைதானத்தில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக ரசிகர்கள் யாரும் மைதானத்தில் அனுமதிக்கப்படவில்லை. அந்த போட்டியில் ஜுவான்டஸ் அணி வெற்றி பெற்றது. ஆரோன் ராம்சேவும், பவ்லோ டிபாலாவும் தலா ஒரு கோல் அடித்தனர்.

அதன் பிறகு கடந்த புதன் கிழமை ஜுவான்டஸ் அணியின் சிறந்த தடுப்பு ஆட்டக்காரர் டேனியல் ருகாணிக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் சோதனை செய்யப்பட்டு பின்னர் உறுதி செய்யப்பட்டது.

இதனால் அணியில் உள்ள 121 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இன்று அந்த அணியை சேர்ந்த டிபாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இந்த தகவல்கள் குறித்து ஜுவான்டஸ் அணியாது எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை.

More News

ரஜினியை கலாய்த்த ரோபோ சங்கர் படக்குழுவினர்?

ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது தனது அரசியல் கண்ணோட்டம் குறித்த சில தகவல்களை வெளிப்படையாக கூறினார். அவரது சில கருத்துக்கள் ரசிகர்களுக்கு வருத்தத்தையும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு

ரஜினியை ஒரு அற்புத மனிதராக பார்க்கின்றேன்: பாரதிராஜா அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தனது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அவர் பேசிய அரை மணி நேர பேச்சில் முதல்வர் பதவிக்கு தகுதியான

ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு: புதிய தேதி அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது.

பெங்களூருவில் GOOGLE ஊழியருக்கு கொரோனா தொற்று..?! பரவாமல் தடுக்குமா அரசு..?!

எந்த ஒரு அறிகுறியும் தெரிவதற்கு முன்னர் வரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஊழியர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்ததாக கூகுளின் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

கொரோனா பயமா??? சந்தேகங்களுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்... 

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 75 ஆக அதிகரித்து இருக்கிறது.