ஜோதிகாவுக்கு தமிழக அரசு வழங்கிய பெருமை மிகுந்த பதவி

  • IndiaGlitz, [Thursday,August 23 2018]

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகையாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்த பின்னர் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் '36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன ஜோதிகா அதன்பின் ஒருசில படங்களில் நடித்து தற்போது பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நல்லெண்ண தூதுவராக ஜோதிகா மற்றும் விவேக் ஆகிய இருவரையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்துள்ளார்.

ஜோதிகா, விவேக் ஆகிய இருவரும் தமிழக மக்களுக்கு பிளாஸ்டிக் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். இந்த பெருமைமிகு பதவியை பெற்றுள்ள இருவருக்கும் கோலிவுட் திரையுலகினர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

More News

பிக்பாஸ் வீட்டின் முதல் வைல்ட்கார்ட் எண்ட்ரி ஆகும் நடிகை  

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக திருப்பங்கள் இன்றி சென்று கொண்டிருக்கின்றது. போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிடுவதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

ஆசைப்பட்டா மட்டும் பத்தாது, அடம்பிடிக்கணும்: 'கனா' டிரைலர் விமர்சனம்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படமான 'கனா' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது தெரிந்ததே. அந்த வகையில் சற்றுமுன் 'கனா' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

விஷாலின் அடுத்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் கனெக்சன்

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தளப்தி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

கேரளாவுக்கு ரூ.1 கோடி நிவாரண நிதியளிக்கும் பிரபல நடிகர்

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது பிக்பாஸ்: டேனியல் மட்டுமல்ல நாங்களும்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்குள் தினந்தோறும் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சண்டையால் போட்டியாளர்களுக்கு போரடிக்கின்றதோ இல்லையோ,