இன்னும் கொஞ்சம் சேர்த்து பேசியிருக்கணும்: 'நாச்சியார்' வசனம் குறித்து ஜோதிகா

  • IndiaGlitz, [Thursday,February 01 2018]

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்த 'நாச்சியார்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானபோது, அந்த டீசரின் முடிவில் ஜோதிகா பேசிய கெட்டவார்த்தை ஒன்று பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து பாலா, ஜோதிகா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வசனம் நிறைய ஆண்கள் பேசிய வசனம் தான் என்றும், முதல்முறையாக ஒரு பெண் பேசியுள்ளதால் விவாத பொருளாகியுள்ளதாகவும் ஜோதிகா கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:

'நாச்சியார்’ டீசரில் நான் பேசியது கெட்டவார்த்தைதான். நான் அதை மறுக்கலை. ஆனால் அந்த வார்த்தை இங்கே சகஜமா புழங்குது. நிறைய படங்கள்ல, நிறைய ஆண்கள் அதை பேசியிருக்காங்க. ஒரு பெண் முதன்முறையா பேசறதாலா, விவாதம் ஆகியிருக்குன்னு நினைக்கிறேன். தவிர ’நாச்சியார்’ போல்டான போலீஸ் கேரக்டர். அது அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற மாதிரியான வசனம். அந்த சீன்ல இன்னும் கொஞ்சம் டயலாக் சேர்த்து பேசணும். ஆனால் நான் ரொம்பவே கன்வின்ஸிங்காதான் பேசியிருக்கேன். ஏன்னா, அது கதையின் ஒரு பகுதி. பொருத்தமான ஒரு இடத்தில் அந்த வசனம் வரும். படம் பார்க்கும்போது ரசிகர்கள் இருநூறு சதவிகிதம் கன்வின்ஸ் ஆகிடுவாங்கன்னு நம்பறேன்’

More News

ரிலீஸ் நாளில் ஆன்லைனிலும் வெளியாகிறது 'மதுரவீரன்

தமிழ்த்திரையுலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், தமிழ்ராக்கர்ஸ் உள்பட ஒருசில இணையதளங்கள் ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் நாளிலேயே திருட்டுத்தனமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்வதுதான்.

அமலாபால் கொடுத்த பாலியல் புகார்! ஒருமணி நேரத்தில் கைது செய்த போலீஸ்

பிரபல நடிகை அமலாபால், இயக்குனர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

வித்தியாசமான கேரக்டரில் த்ரிஷா நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் நாயகியாகவும், இளம் நடிகைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பிசியாகவும் நடித்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா.

சூர்யா 36' படத்தில் இணைந்த மாஸ் தெலுங்கு நடிகர்

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து அவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

தமிழுக்காக வைரமுத்து செய்த நிதியுதவி

கடந்த சில நாட்களாக ஆண்டாள் பிரச்சனை காரணமாக தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வந்த கவியரசு வைரமுத்து மீண்டும் முக்கிய செய்தியில் இடம்பெற்றுள்ளார்