ஆகஸ்ட் 3-ல் வெளியாகிறது ஜோதிகாவின் அடுத்த படம்

  • IndiaGlitz, [Thursday,July 26 2018]

ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படம் தமிழில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜோதிகா, ஜிவி பிரகாஷ் மற்றும் அறிமுக நாயகி இவானா ஆகியோர்களின் நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தது.

இந்த நிலையில் இந்த படத்தை தெலுங்கில் டப் செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது டப்பிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழை போலவே தெலுங்கிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய்சேதுபதி-நயன்தாரா படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகல்?

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் 'சயீரா நரசிம்ம ரெட்டி' என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

தீபாவளி ரிலீசில் இருந்து விலகுகிறதா 'என்.ஜி.கே?

வரும் தீபாவளி திருநாளில் விஜய்யின் 'சர்கார்' மற்றும் சூர்யாவின் 'என்.ஜி.கே' ஆகிய இரண்டு படங்களும் வெளியாகும் என்று செய்திகள் வெளிவந்ததால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகமாக இருந்தனர்.

ஸ்ரீரெட்டியை வெளுத்து வாங்கிய தமிழ் நடிகை

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கியிருந்து கோலிவுட் திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்.

பள்ளி குழந்தைகளுக்கு வரலட்சுமி கொடுத்த இன்ப அதிர்ச்சி

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் பிறரை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான் என்று கூறுவதுண்டு. அந்த வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் பள்ளிக்குழந்தைகளை சந்தோஷப்படுத்தி சந்தோஷம் அடைந்துள்ளார். 

இவர்தான் கேப்டன் விஜயகாந்தின் மருமகளா?

கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் தமிழ் சினிமாவில் 'சகாப்தம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும்