close
Choose your channels

ஸ்ரீரெட்டியை வெளுத்து வாங்கிய தமிழ் நடிகை

Wednesday, July 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கியிருந்து கோலிவுட் திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி, ஸ்ரீகாந்த் ஆகியோர்கள் குறித்து அவர் கூறிய குற்றச்சாட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் ஸ்ரீரெட்டியின் இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து கோலிவுட் திரையுலகினர் பலர் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஸ்ரீரெட்டி விளம்பரத்திற்காக குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருவதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகை சோனியா போஸ் இதுகுறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியபோது, 'ஸ்ரீரெட்டி தன்னை மட்டுமின்றி பெண் இனத்தையே கேவலப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் சீனியர் திரையுலகினர் குறித்து குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருவது நல்லதல்ல என்றும் கூறியுள்ளார். குறிப்பாக முருகதாஸ் போன்ற இயக்குனர் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய குற்றச்சாட்டுக்கள் அபாண்டமானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஸ்ரீரெட்டியின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்த வீடியோ இதோ:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.