ஒரு ஹீரோவுக்கு எதுக்கு நான்கு ஹீரோயின்? ஜோதிகா ஆவேசம்

  • IndiaGlitz, [Monday,April 24 2017]

ஜோதிகா நடித்த 'மகளிர் மட்டும்' திரைப்படத்தின் பாடல்கள் இன்று சென்னை சத்யம் திரையரங்கில் வெளியானது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஜோதிகா பெண்களை திரைப்படங்களில் மரியாதையாக காட்டும்படி வேண்டுகோள் விடுத்தார். அவர் மேலும் கூறியதாவது:
இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் வீட்டு பெண்கள், உங்கள் அம்மா, தங்கை, தோழிகள் போன்ற கேரக்டரை நடிகைகளுக்கு தாருங்கள். திரைப்படங்களை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும். திரைப்படங்களில் வரும் டயலாக், ஸ்டைல் , உடை ஆகியவற்றை கோடிக்கணக்கான இளைஞர்கள் பின்பற்றுவார்கள். எனவே திரைப்படங்கள் பொறுப்புடன் தயாரிக்கப்பட வேண்டும்.
மேலும் பெண்களூக்கு அறிவாளியான கேரக்டர்கள் கொடுங்கள். வெறும் இரட்டை அர்த்த வசனங்களுக்கு மட்டும் நடிகையை பயன்படுத்த வேண்டாம். ஹீரோ பின்னாடியே சுற்றிக்கொண்டு ஐ லவ் யூ என்று சொல்லும் கேரக்டர்களை தயவு செய்து நிறுத்தி கொள்ளுங்கள். அதேபோல் ஒரு ஹீரோவுக்கு நான்கு ஹீரோயின்கள் வைத்தால் இளைஞர்களும் நான்கு கேர்ள் பிரண்ட் வைத்து கொள்ள முயற்சி செய்வார்கள். ஒரு படத்தில் ஒரு ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் போதும். இரண்டு, மூன்று, நான்கு என போய்க்கொண்டே இருப்பது நல்லதல்ல' என்று கூறினார்.

More News

பி.பி.ஓ வேலையைவிட பிச்சை எடுப்பதில் அதிக வருமானம். டெல்லி இளைஞரின் புதிய அனுபவம்

இந்திய தலைநகர் டெல்லியில் பி.பி.ஓ நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இளைஞர் ஒருவர் தினமும் அலுவலகம் செல்லும்போது ஏராளமான பிச்சைக்காரர்களை பார்த்துள்ளார்...

ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' படத்தில் கார்த்தி?

பிரபல நடிகை ஜோதிகா நடித்து முடித்துள்ள 'மகளிர் மட்டும்' படத்தின் பாடல்கள் இன்று சென்னையில் மிகச்சிறப்பாக வெளியானது. முதல்கட்ட விமர்சனத்தில் ஜிப்ரானின் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

ரூ.20 கோடி மோசடியா? தீபாவிடம் போலீஸ் விசாரணை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரீசாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் ஜெ.தீபா. இவரது வீட்டின் முன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொண்டர்கள் குவிந்ததை அனைவரும் அறிவர்...

உதவி இயக்குனராக மாறிய நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 'மாயா', 'டோரா'வை அடுத்து அவர் நடித்துள்ள மற்றொரு நாயகி சப்ஜெக்ட் திரைப்படம் 'அறம்'...

விவசாயிகளுக்காக செயலில் இறங்கிய நடிகை சினேகா

தமிழக விவசாயிகள் கடந்த 41 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திய நிலையில் இந்த போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அவர்கள் இன்று அல்லது நாளை தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது...