close
Choose your channels

ஜோதிகாவுக்கும் வந்ததா இரண்டாம் பாக ஆசை? முதல் பாக இயக்குனருக்கு அட்வான்ஸ்..!

Saturday, April 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் ரஜினி, கமல் உட்பட பல பிரபலங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது ஜோதிகாவுக்கும் இரண்டாம் பாக ஆசை வந்து விட்டதாக கூறப்படுகிறது ஜோதிகா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’உடன்பிறப்பு’. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ஜோதிகாவின் அண்ணனாக சசிகுமார், கணவராக சமுத்திரக்கனி நடித்திருந்தார்கள். இந்த படம் பிசி சென்டர்களில் நல்ல வரவேற்பு பெற்றது.

இயக்குனர் ரா சரவணன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த ஆலோசனை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ’உடன்பிறப்பே 2’ கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ரா சரவணனுக்கு ஒரு பெரிய தொகை அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் ஜோதிகா நடிக்கும்’உடன்பிறப்பே 2’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

முதல் பாகம் போலவே இரண்டாம் பாகத்திலும் அண்ணன் தங்கை சென்டிமென்ட், எமோஷனல் காட்சிகள் அதிகம் இருக்கும் என்றும் இந்த படம் ஜோதிகாவுக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment