ஜோதிகாவின் புதிய படத்தின் இயக்குனர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,September 11 2018]

நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பின்னர் '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார். இந்த படம் பெற்ற வெற்றியால் அதன்பின்னர் பாலாவின் 'நாச்சியார்' உள்பட ஒருசில திரைப்படங்களில் ஜோதிகா நடித்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'செக்க சிவந்த வானம்', 'ராதாமோகன் இயக்கத்தில் 'காற்றின் மொழி' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் ஜோதிகா நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஜோதிகா நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் என்பவர் இயக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

ஹீரோவாக நடிப்பது உண்மையா? யோகிபாபு விளக்கம்

நல்ல மார்க்கெட்டில் இருக்கும் காமெடி நடிகர்கள் திடீரென ஹீரோவாக ஆசைப்பட்டு மார்க்கெட்டை இழந்தவர்கள் ஏராளம். சமீபத்தில் கூட ஒரு முன்னணி காமெடி நடிகர் ஹீரோ ஆசையினால் காணாமல் போனதை கோலிவுட் அறியும்

சென்றாயன் எவிக்சனில் நடந்தது என்ன? திடுக்கிடும் தகவல்

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் செண்ட்ராயன் வெளியேறியதை அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கும் பலரால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

ஓட்டுக்கு பணம்: தேர்தலில் அல்ல, பிக்பாஸ் நிகழ்ச்சியில்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஐஸ்வர்யா எப்படி காப்பற்றப்பட்டார் என்ற புதிருக்கு பலருக்கு விடை கிடைக்கவில்லை. ஐஸ்வர்யாதான் வெளியேற 99% வாய்ப்பு இருந்த நிலையில்

25 வருடம் செக்யூரிட்டி வேலை பார்த்த கே.பாலசந்தர் நாயகி

இயக்குனர் இமயம் கே.பாலசந்தர் இயக்கிய 'அரங்கேற்றம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரமிளா.

திருமணத்தை திடீரென நிறுத்திய பிரபல நடிகை

அர்ஜுன் ரெட்டி' பட புகழ் விஜய் தேவரகொண்டா நடித்த 'கீதா கோந்தம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.