close
Choose your channels

ஜோதிகாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுவா? புதிய போஸ்டர் ரிலீஸ்..!

Thursday, February 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடிகை ஜோதிகா நடித்த ‘காதல்’ என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

நடிகை ஜோதிகா கடந்த 25 ஆண்டுகளாக திரையுலகில் உள்ளார் என்பதும் அவர் தமிழ் உள்பட பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை ஜோதிகா நடித்து வரும் படங்களில் ஒன்று ’காதல்’. இந்த படத்தின் நாயகனாக மம்மூட்டி நடித்து இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ராடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று சற்றுமுன் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த படம் வரும் ஏப்ரல் 20-ம் தேதி பக்ரீத் விடுமுறை தினத்தின் போது வெளியாகும் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய ஜோபேபி இயக்கி உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சூர்யா இந்த படத்தின் குழுவினர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில், ‘இந்த படத்தில் ஐடியா மற்றும் ஒவ்வொரு பணிகளையும் நான் முதல் நாளில் இருந்தே கவனித்து வருகிறேன். இயக்குனர் ஜோபேபி மிகவும் சூப்பராக செயல்பட்டு வருகிறார். மம்முட்டி, ஜோதிகா மற்றும் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1990 இல் நடக்கும் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு மாத்யூஸ் இசையமைத்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment