இந்த மாயாஜால அறிவியலை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வோம்: நடிகை ஜோதிகா

  • IndiaGlitz, [Thursday,January 06 2022]

இந்த மாயாஜால அறிவியலை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வோம் என்று ஜோதிகா கூறியது தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா ஆகிய இருவரும் சமீபத்தில் ஓய்வெடுக்க கேரளா சென்றனர் என்பது குறித்த செய்தி ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் கேரளாவில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஆயுர்வேதத்தின் மாயாஜாலம் குறித்து நடிகை ஜோதிகா கூறியிருப்பதாவது: திருச்சூர், ராஜா கடற்கரையில் எனது வாழ்க்கையின் மிகவும் நிறைவான 21 நாட்களாக சிறிது நேரம் ஒதுக்கினேன். உண்மையான மந்திரம் இயற்கையில் அனைத்தையும் குணப்படுத்தும் சக்தி படைத்தது என்று என்னை நம்ப வைத்த இடம்.

இந்தியர்களாகிய நாம் நமது நாட்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளான ஆயுர்வேதம் மற்றும் யோகா பயிற்சி செய்வதன் மூலம் அவற்றை மதிப்போம். மேலும் இந்த மாயாஜால அறிவியலை நமது அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவோம் என்று ஜோதிகா கூறியுள்ளார்.

More News

'பீஸ்ட்' படத்தை அடுத்து மீண்டும் வில்லனாகும் செல்வராகவன்: எந்த படம் தெரியுமா?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பீஸ்ட்' படத்தில் முக்கிய வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடித்து இருந்தார் என்பதும் இந்த படத்தில் அவர் வில்லனாக மிரட்டி இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியானது.

சசி இயக்கும் அடுத்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' நடிகை!

இயக்குனர் சசி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வரும் நடிகை ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அஜித், விஜய் பட வில்லன் நடிகரின் மனைவி, மகன் கைது: அதிர்ச்சி காரணம்

அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களின் படங்களில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவரின் மனைவி மற்றும் மகன் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'பீஸ்ட்' படத்துடன் கனெக்சன் ஆன சிவகார்த்திகேயன் அடுத்த படம்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்துடன் சிவகார்த்திகேயன் அடுத்த படம் கனெக்சன் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

கங்குலி குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த டிசம்பர் மாதத்தில்