close
Choose your channels

'பீஸ்ட்' படத்துடன் கனெக்சன் ஆன சிவகார்த்திகேயன் அடுத்த படம்!

Thursday, January 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்துடன் சிவகார்த்திகேயன் அடுத்த படம் கனெக்சன் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாக இருக்கும் தமிழ், தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் இசையமைப்பாளரான தமன் ஏற்கனவே பாடல்கள் கம்போஸ் செய்யும் பணியை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’எஸ்.கே.20’ என்று அழைக்கப்படும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் பீஸ்ட் படத்தில் பணிபுரிந்த நிலையில் அவருடைய அபார திறமையை சிவகார்த்திகேயன் தனது நண்பர் நெல்சன் மூலம் கேள்விப்பட்டு தனது அடுத்த படத்தில் பணிபுரிய மனோஜ் பரமஹம்சாவை இயக்குனரிடம் பரிந்துரை செய்ததாகவும் இதனை அடுத்து ’எஸ்.கே.20’ படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 25 முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி, லண்டன் உள்பட பல பகுதிகளில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.