'தி லெஜண்ட்' கர்நாடக மாநிலத்தில் ரிலீஸ் செய்யும் பிரபலம் இவர் தான்!

பிரபல தொழிலதிபர் அருள் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமாக ரிலீசாக உள்ள இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் அன்புச்செழியன் பெற்று உள்ளார் என்பதும் இதனை அடுத்து தெலுங்கு மாநிலங்கள் மற்றும் ஓவர்சீஸ் உரிமை பெற்ற பிரபலங்கள் குறித்தும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் கர்நாடக ரிலீஸ் உரிமையை செந்தில் என்பவர் பெற்றுள்ளார். இதுகுறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரெளட்டாலா, விஜயகுமார், பிரபு, விவேக், சுமன், நாசர், லிவிங்ஸ்டர்ன், யோகிபாபு, ரோபோ சங்க உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More News

'தி கிரே மேன்' புரமோஷன் நிகழ்ச்சியில் தனுஷின் மகன்கள்: வைரல் வீடியோ

தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான 'தி கிரே மேன்' வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை

லிங்குசாமியின் 'தி வாரியர்' வெற்றி பெற பிரபல தமிழ் நடிகர் வாழ்த்து!

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாக்கிய 'தி வாரியர்' என்ற திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

'லவ் யூ', ரியல் ஹீரோவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த வரலட்சுமி: வீடியோ வைரல்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி 'லவ் யூ' என்று கூறி தனது ரியல் ஹீரோவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 

கணவர் இல்லாத முதல் திருமண நாள்: மீனாவின் உருக்கமான பதிவு

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி காலமான நிலையில் நேற்று மீனா தனது திருமண நாள் குறித்து உருக்கமாக செய்த பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'தி வாரியர்' உண்மைக்கதையா? இயக்குனர் லிங்குசாமி தகவல்!

லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள 'தி வாரியர்' என்ற திரைப்படம் நாளை தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது.