close
Choose your channels

'தி லெஜண்ட்' கர்நாடக மாநிலத்தில் ரிலீஸ் செய்யும் பிரபலம் இவர் தான்!

Thursday, July 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொழிலதிபர் அருள் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமாக ரிலீசாக உள்ள இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் அன்புச்செழியன் பெற்று உள்ளார் என்பதும் இதனை அடுத்து தெலுங்கு மாநிலங்கள் மற்றும் ஓவர்சீஸ் உரிமை பெற்ற பிரபலங்கள் குறித்தும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் கர்நாடக ரிலீஸ் உரிமையை செந்தில் என்பவர் பெற்றுள்ளார். இதுகுறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரெளட்டாலா, விஜயகுமார், பிரபு, விவேக், சுமன், நாசர், லிவிங்ஸ்டர்ன், யோகிபாபு, ரோபோ சங்க உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.