ரஜினிகாந்த் தனது தவறுக்கு தகுந்த விலை கொடுப்பார்: கி.வீரமணி

  • IndiaGlitz, [Monday,January 20 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு பேட்டி அளித்தாலோ, அல்லது ஒரு விழாவில் பேசினாலோ அந்த பேச்சின் தாக்கம் அடுத்த ஒரு வாரத்திற்குள் இருக்கும் என்பது தெரிந்ததே. அனைத்து தொலைக்காட்சிகளும் அவர் பேசியது குறித்து விவாதம் நடத்துவதும் அனைத்து அரசியல்வாதிகளும் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் ஆதரவு தெரிவிப்பதுமாக இருப்பதுதான் கடந்த கால வரலாறாக உள்ளது

அந்த வகையில் சமீபத்தில் துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசி ஒருவாரம் ஆன பின்னரும் இன்னும் அந்த நெருப்பு அணையாமல் பற்றிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது குறித்து திராவிடர் கழக தலைவர் கி வீரமணி கருத்து தெரிவிக்கும் போது ’ரஜினிகாந்த், பெரியார் குறித்து தவறான தகவலை தெரிவித்ததற்கு தகுந்த விலை கொடுப்பார் என்றும் ஒருவர் தவறாக பேசும் போது அதை மற்றவர்கள் சுட்டிக் காட்டினால் அதை ஏற்றி திருத்திக் கொள்வது தான் சரி என்றும் கூறினார்

மேலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவர் எப்படி பேசுவார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் அவர் எடுத்த நிலையே இதற்கு சான்றாக இருக்கிறது என்றும் வீரமணி கூறியுள்ளார்

More News

மோகன்ராஜா இயக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகர்!

விஜய் நடிக்கவிருக்கும் 65ஆவது படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் மோகன் ராஜாவும் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது மோகன் ராஜா இயக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது 

நான் இயக்கிய படம் பாதியில் நின்றதற்கு இதுதான் காரணம்: அமீர் அதிர்ச்சி தகவல்

ஜல்லிக்கட்டு பிரச்சனையை மையமாக வைத்து இயக்குனர் அமீர் இயக்கிய ஒரு திரைப்படம் திடீரென பாதியில் நின்று போனது ஏன்? என்ற காரணத்தை இரண்டு வருடம்

என் போன்ற நல்லவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்தால் தீபிகாவுக்கு பிரச்சனைகள் வராது..! பாபா ராமதேவ்.

'தீபிகா படுகோன் தன்னை ஆலோசகராக நியமித்துக் கொள்ள வேண்டும்' என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து துணை ஜனாதிபதி பெருமிதம்

துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாய வேலையில் ஈடுபட்ட புகைப்படங்களை வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மசூதியில் நடைபெற்ற இந்து திருமணம்.. 10 சவரன் நகையும் பணமும் கொடுத்த இஸ்லாமியர்கள்..!

கேரள மாநிலம் ஆலப்புழாவின் மசூதி ஒன்றில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமண விழா மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.