ஹரிஷ் கல்யாணை அடுத்து லூஸ்லியாவுக்கு ஆதரவு தரும் இன்னொரு பிக்பாஸ் பிரபலம்!

  • IndiaGlitz, [Thursday,June 27 2019]

ஹரிஷ் கல்யாண் நடித்த 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' பட பாடலை நேற்று லூஸ்லியா பாடியதை அடுத்து நடிகரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான ஹரிஷ் கல்யாண், லூஸ்லியா குறித்து பெருமையாக தனது டுவிட்டரில் பதிவு செய்ததை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்னொரு பிக்பாஸ் பிரபலத்திடம் இருந்து லூஸ்லியாவுக்கு தற்போது பாராட்டு கிடைத்துள்ளது.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான காஜல் பசுபதி, லூஸ்லியா குறித்து தனத் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியபோது, 'லூஸ்லியாவுக்கு ஆர்மி அமைத்து அவரை பிரபலமாக்க ஒரு ஐடி குரூப் வேலை செய்கிறதா? என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் என்னை பொருத்தவரையில் தன்னை முன்னிலைப்படுத்த அவர் எந்த முயற்சியையும் எடுத்து கொள்ளவில்லை. அவரிடம் நடிப்பு இல்லை என்பது மட்டும் உண்மை. அவர் ஒரு நல்ல பெண் என்று சர்டிபிகேட் கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இதேபோல் தான் ஆரம்பத்தில் அமைதியாக இருந்து பின்னர் அனைவர் மனங்களையும் வென்ற ரித்விகா சாம்பியன் பட்டம் வென்றார். அதேபோல் இந்த முறை அமைதியாக, நடிப்பின்றி இயல்பாக இருந்து வரும் லூஸ்லியா சாம்பியன் பட்டத்தை பெறுவார் என்றே பலர் கணித்து வருகின்றனர்.

More News

பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல நான் தயார்! யாஷிகா ஆனந்த்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா, பல நேரங்களில் பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்தாலும்,

இந்தியா-மே.இ.தீவுகள் போட்டியை நேரில் ரசித்து வரும் தமிழ் சினிமா நட்சத்திர ஜோடி!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஒரு மாதமாக இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இன்று மான்செஸ்டர் மைதானத்தில் இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணிகள்

வெயில், மழை, புயலுடன் போராட்டம்: சிம்பு குறித்து கவுதம் கார்த்திக்

சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறித்து ஏற்கனவே பார்த்தோம். சமீபத்தில் சிம்புவிடம் கவுதம் கார்த்திக்

சென்னையில் இருந்து கூகுளுக்கு மீண்டும் ஒரு சுந்தர் பிச்சை!

தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை, உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்திற்கு கடந்த 2015ஆம் ஆண்டு சி.இ.ஓவாக பொறுப்பேற்றார்.

இவ்வளவு நாள் பிழைப்ப பார்த்துகிட்டு நல்லாதானே இருந்திங்க: வெண்ணிலா கபடிக்குழு 2 டீசர்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த 'வெண்ணிலா கபடிக்குழு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து பல கபடி திரைப்படங்கள் தமிழில் வெளிவந்தன.