close
Choose your channels

வெயில், மழை, புயலுடன் போராட்டம்: சிம்பு குறித்து கவுதம் கார்த்திக்

Thursday, June 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறித்து ஏற்கனவே பார்த்தோம். சமீபத்தில் சிம்புவிடம் கவுதம் கார்த்திக் ஆட்டோகிராப் பெற்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்றுமுன் சிம்புவுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை கவுதம்கார்த்திக் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து கடுமையான காற்று, சுட்டெரிக்கும் வெயில், கொட்டும் கனமழை, எல்லாவற்றையும் நாங்கள் இன்று சந்தித்து வருகிறோம். ஆனாலும் நாங்கள் எங்கள் பணியில் முன்னேறி கொண்டே இருக்கின்றோம் என்று பதிவு செய்துள்ளார்.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான 'முஃப்தி' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தை நார்தன் இயக்கி வருகிறார். மதன் கார்க்கி இந்த படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதுகிறார். சிம்புவின் 45வது படமாக இந்த படம் உருவாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.