மின்சாரம் பாயும் இடைவேளை காட்சி: விவேகம் குறித்து கபிலன்

  • IndiaGlitz, [Monday,August 07 2017]

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் எழுதியது மட்டுமின்றி திரைக்கதை விவாதத்திலும் கலந்து கொண்ட கபிலன் வைரமுத்து தனது அனுபவங்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஒரு பன்னாட்டுக் காவல்துறை - ஒரு சர்வதேச குற்றப் பின்னணி. இந்த இரு துருவங்களுக்குமான மோதல்தான் 'விவேகம்' படத்தின் ஒன்லைன் கதை என்றும், இந்த படத்திற்கான திரைக்கதை அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கியதாக கபிலன் தெரிவித்தார்.
பொதுவாக பெரிய ஸ்டார் படங்களின் இடைவேளை காட்சி அதிரடியாகவும், அடுத்து என்ன வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் 'விவேகம்' படத்தின் இடைவேளை காட்சி குறித்து கபிலன் கூறியபோது, 'விவேகம் படத்தோட இடைவேளைக் காட்சியைப் பார்த்தப்போ, உடம்புல மின்சாரம் பாயுற மாதிரி இருந்தது' என்று கூறினார். ஏற்கனவே அஜித்தின் 'வீரம்' மற்றும் 'வேதாளம்' படங்களில் இடைவேளை காட்சி அட்டகாசமாக இருந்த நிலையில் இந்த படத்தின் இடைவேளை காட்சியும் அசத்தலாக இருக்கும் என்று கபிலன் வைரமுத்து கூறுவதில் இருந்து தெரிகிறது.

More News

எங்க அம்மாவுக்கு மட்டுமே உரிமையுண்டு: கமல் கண்டிப்புக்கு காயத்ரி கண்டனம்

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல்ஹாசன் நேற்று அனைத்து பங்கேற்பாளர்களையும் ஒரு பிடி பிடித்தார். குறிப்பாக காயத்ரியிடம் கெட்ட வார்த்தை பேசியது குறித்து கொஞ்சம் கடுமையான கண்டிப்புடன் நடந்து கொண்டார். அப்பொழுதே காயத்ரியின் முகம் சுருங்கியதை பார்க்க முடிந்தது...

கமல்ஹாசனின் கண்டிப்பால் களைகட்டிய பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக பாரபட்சமாகவும், ஒருசிலர் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் இந்த குற்றச்சாட்டு மிக அதிகமாகியது...

கமல்ஹாசனின் 'வெற்றி விழா'வுக்கு கிடைத்த வெற்றி வசூல்

சூப்பர் ஹிட் ஆன பழைய படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீரிலீஸ் செய்யும் வழக்கம் தமிழ்த்திரையுலகில் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது...

'பாகுபலி 2', பைரவாவுக்கு அடுத்த இடத்தை பிடித்த 'விக்ரம் வேதா'

இந்த ஆண்டில் முதல் மூன்று வாரத்தில் அதிக வசூல் செய்த படங்களாக எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான படமான 'பாகுபலி 2' முதல் இடத்திலும் தளபதி விஜய்யின் 'பைரவா' படம் இரண்டாவது இடத்திலும் உள்ளது...

ஹிப் ஹாப் ஆதியின் 'மீசையை முறுக்கு' செய்த சாதனை

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷை அடுத்து ஹீரோவாக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் புதியதாக இணைந்துள்ளவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி...