close
Choose your channels

மின்சாரம் பாயும் இடைவேளை காட்சி: விவேகம் குறித்து கபிலன்

Monday, August 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் எழுதியது மட்டுமின்றி திரைக்கதை விவாதத்திலும் கலந்து கொண்ட கபிலன் வைரமுத்து தனது அனுபவங்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஒரு பன்னாட்டுக் காவல்துறை - ஒரு சர்வதேச குற்றப் பின்னணி. இந்த இரு துருவங்களுக்குமான மோதல்தான் `விவேகம்' படத்தின் ஒன்லைன் கதை என்றும், இந்த படத்திற்கான திரைக்கதை அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கியதாக கபிலன் தெரிவித்தார்.
பொதுவாக பெரிய ஸ்டார் படங்களின் இடைவேளை காட்சி அதிரடியாகவும், அடுத்து என்ன வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் 'விவேகம்' படத்தின் இடைவேளை காட்சி குறித்து கபிலன் கூறியபோது, 'விவேகம் படத்தோட இடைவேளைக் காட்சியைப் பார்த்தப்போ, உடம்புல மின்சாரம் பாயுற மாதிரி இருந்தது' என்று கூறினார். ஏற்கனவே அஜித்தின் 'வீரம்' மற்றும் 'வேதாளம்' படங்களில் இடைவேளை காட்சி அட்டகாசமாக இருந்த நிலையில் இந்த படத்தின் இடைவேளை காட்சியும் அசத்தலாக இருக்கும் என்று கபிலன் வைரமுத்து கூறுவதில் இருந்து தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.