'கடாரம் கொண்டான்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,June 30 2019]

சீயான் விக்ரம் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வந்த 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் நேற்றுடன் விக்ரம் தனது பகுதிக்கான டப்பிங் பணியையும் முடித்துவிட்டார் என்று வெளியான செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அட்டகாசமான டிரைலர் வரும் ஜூலை 3ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வரும் ஜூலை 19ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதே தேதியில் தான் அமலாபாலின் 'ஆடை' திரைப்படமும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், அக்சராஹாசன், நாசர் மகன் அபி மெஹ்தி ஹாசன், பிக்பாஸ் புகழ் மீராமிதுன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

'அண்ணா' சொன்ன லாஸ்லியாவை அழவைத்த கவின்!

பிக்பாஸ் வீட்டில் உள்ள கவின் ஒரு காதல் இளவரசன் என்பதும் அவரை சுற்றி எப்போதும் பெண் போட்டியாளர்களின் கூட்டம் இருக்கும் என்பதும் தெரிந்ததே.

பிக்பாஸ் விட்டிலும் நுழைந்த தமிழ்ப்பிரச்சனை! மதுமிதா-அபிராமி மோதல்!

கடந்த சில ஆண்டுகளாக 'தமிழ், தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி' ஆகியவற்றை கூறுவது ஒரு ஃபேஷனாகிவிட்டது. பெரும்பாலான அரசியல்வாதிகள் தமிழை முதலீடாக கொண்டுதான்

சிக்கலான கேள்விகளில் இருந்து நழுவிய பிக்பாஸ் கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் கமல்ஹாசன் கேப் கிடைக்கும்போதெல்லாம் தனது பெருமையையும் அரசியல் கருத்தையும் திணிக்கும் முயற்சியில்

அடிச்சி மண்டைய உடைச்சிடுவேன்: கவினை மிரட்டிய லாஸ்லியா!

பிக்பாஸ் வீட்டில் யாருடைய வம்புக்கும் செல்லாமல் அமைதியாக நடக்கும் கூத்துக்களையும் வேடிக்கைகளையும் கவனித்து வரும் லாஸ்லியாவை கவின் வம்புக்கு இழுக்கும்

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு வந்த திடீர் சிக்கல்!

கோலிவுட் திரையுலகில் தற்போது டைட்டில் பஞ்சாயத்து ஒரு பெரிய பஞ்சாயத்தாக உள்ளது. 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் டைட்டில் பஞ்சாயத்து காரணமாக திட்டமிட்ட நாளில் ரிலீஸ்