close
Choose your channels

'கடாரம் கொண்டான்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sunday, June 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வந்த 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் நேற்றுடன் விக்ரம் தனது பகுதிக்கான டப்பிங் பணியையும் முடித்துவிட்டார் என்று வெளியான செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அட்டகாசமான டிரைலர் வரும் ஜூலை 3ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வரும் ஜூலை 19ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதே தேதியில் தான் அமலாபாலின் 'ஆடை' திரைப்படமும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், அக்சராஹாசன், நாசர் மகன் அபி மெஹ்தி ஹாசன், பிக்பாஸ் புகழ் மீராமிதுன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.