close
Choose your channels

அங்கிள் இந்த படம் ஓடிடியில ரிலீஸ் ஆகுதா? 'கோஸ்டி' டீசர்

Monday, October 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்த ‘கோஸ்டி’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

இந்த படத்தில் இரண்டு கேரக்டர்களில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். ஒரு கேரக்டர் போலீஸ், இன்னொரு கேரக்டர் சினிமா நடிகை. சினிமா நடிகை செய்த ஒரு சிறிய தவறு காரணமாக போலீஸ் காஜல் அகர்வாலை பேய் பிடித்து விட அந்த பேயை விரட்ட பல்வேறு முயற்சிகள் எடுப்பது தான் இந்த படத்தின் காமெடியான கதை

காஜல் அகர்வால், யோகிபாபு, கேஎஸ் ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், ஊர்வசி, ராதிகா சத்யன், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, சுரேஷ் மேனன், தேவதர்ஷினி உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ’குலேபகாவலி’ ’ஜாக்பாட்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

ஜாகேப் ரத்னராஜ் ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவான இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment